“ஆபாச புகைப்படத்தை வெளியிட போவதாக மிரட்டிய இளைஞர் “பயத்தில் மாணவி தீ குளித்து தற்கொலை !!!…

ஈரோடு மாவட்டம்  அருகே புகைப்படத்தை ஆபாசமாக  வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியதால், 10ஆம்  வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டம்  தேவம்பாளையத்தை சேர்ந்தவர்   நந்தகுமார் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் . இந்நிலையில்  அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியோடு நந்தகுமார் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது .பின் மாணவிக்கு நந்தகுமார்  பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார் இதனை சகித்துக் கொள்ளாத மாணவி அவரிடம் பேசுவதை குறைத்து விட்டார்

அதன்பின்  தன்னிடம் பேசாததற்கான காரணம் கேட்டு தொல்லை செய்து வந்துள்ளார். எதற்கும் மசியாத மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நந்தகுமார்  இருவரும் எடுத்த புகைப்படம் தன்னிடம் உள்ளதாகவும் என்னோடு பேசாவிட்டால் அதனை  ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பரப்பி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். அதன்பின் செய்வதறியாது குழப்பத்தில் இருந்த மாணவி மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்

அதன்பின் அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில்   அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் அதன்பின் குற்றவாளியான நந்தகுமாரை காவல்துறையினர் போஸ்கோ தற்கொலைக்கு தூண்டுதல் மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.