அந்த தப்ப நாங்கதான் பண்ணுனோம்…. வசமாக சிக்கியவர்கள்… கைது செய்த காவல்துறை…!!

டாக்டர் வீட்டில் பித்தளை பாத்திரங்களை திருடிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள சின்ன பகண்டை பிள்ளையார் கோவில் தெருவில் முத்துக்குமரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் டாக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு புதுச்சேரி அரியாங்குப்பத்தில் வீடு உள்ளதால் முத்துக்குமரன் தனது குடும்பத்துடன் அங்கு வசித்து வந்த நிலையில், சின்ன பகண்டை பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள முத்துக்குமாரின் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த முத்துக்குமார் விரைந்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது, ரூபாய் 12 ஆயிரம் மதிப்புள்ள பித்தளை பாத்திரங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து சின்ன பகண்டை காவல் நிலையத்தில் முத்துக்குமார் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் டாக்டர் வீட்டில் திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பாக்கம் பாளையத்தில் வசித்து வரும் முகிலன் என்பவரையும், ஜெயகணேஷ் என்பவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் டாக்டர் வீட்டில் பித்தளை பாத்திரங்கள் திருடியதை அவர்கள் ஒத்துகொண்டனர். இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *