அதுக்கு தான் முயற்சி பண்றீங்களா…. மடக்கி பிடித்த கிராம மக்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளு கொட்டாய் கிராமத்தில் இருக்கும் ஏரியில் நள்ளிரவு  நேரத்தில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்று பார்த்த போது 5 பேர் நாட்டு துப்பாக்கி மூலம் வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கிராம மக்கள் 5 பேரையும் மடக்கிப்பிடித்து அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 5 பேரையும் கைது செய்துள்ளனர். அதோடு அவர்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *