காசு கேட்டது ஒரு குத்தமா… ரகளை செய்த கும்பல்… மடக்கி பிடித்த காவல்துறையினர்….!!

உணவு அருந்தி விட்டு பணம் கொடுக்காமல் ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஜி.எஸ்.டி சாலையில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த ஹோட்டலுக்கு சென்ற 15 பேர் உணவு அருந்திவிட்டு ஹோட்டல் ஊழியர் பணம் கேட்டதற்கு பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனையடுத்து அந்த 15 பேருக்கும் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த அந்த 15 பேரும் ஹோட்டல் உரிமையாளரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த மதுராந்தகம் போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளார். இதனையடுத்து ஊரப்பாக்கத்தில் வசித்து வரும் கார்த்திக், நவீன்குமார் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்த  அச்சரப்பாக்கம் காவல்துறையினர் அவர்களை கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்து விட்டனர்.