“காதலை ஏற்க மறுத்த சட்டக்கல்லுரி மாணவி” பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர்..!!

திருச்சியில் காதலை ஏற்க மறுத்ததால் சட்டக்கல்லுரி மாணவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். 

இன்றைய இளைஞர்கள் மத்தியில் காதல் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. சில இளைஞர்கள்   காதலுக்காக எதையும் செய்ய துணிந்து விடுகிறார்கள். அதே நேரத்தில் காதலை ஏற்காமல் போனால் கொலை செய்யும் அளவிற்கு செல்கின்றனர்.அந்த வகையில் திருச்சியில் தவச்செல்வன் என்ற இளைஞர் ஒருவர் சட்டக் கல்லூரி மாணவியிடம் தனது காதலை கூறியுள்ளார். அதற்கு அம்மாணவி சம்மதிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

Image result for பெட்ரோல் ஊற்றி தீ

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் அந்த மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் அந்த மாணவிக்கு 40 முதல் 45 சதவீதம் வரை தீக் காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் தீக்காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுக்கான பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த அந்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.