75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. எனவே நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பொதுமக்கள் அதிக அளவில் கூட இடங்களான வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கடலூர் மாவட்டத்திலுள்ள முது நகர் காவல் துறையினர் அப்பகுதியிலுள்ள ரயில் நிலையத்தில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் ரயில் நிலையத்திற்குள் வரும் அனைத்து ரயில்களிலும் ஒவ்வொரு பெட்டியாக சென்றும் காவல்துறையினர் சோதனை நடைபெற்று வருகின்றது. மேலும் தண்டவாளத்தை கண்காணிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.