பொள்ளாச்சி சம்பவம் :”பொய்யான தகவல் பரப்பியதால் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கைது “

பொள்ளாச்சி சம்பவம் போன்று பெரம்பலூரிலும் பாலியல் வன்முறைகள் நடப்பதாக பொய்யான தகவல் பரப்பி நாம் தமிழர் கட்சி மாவட்டசெயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

பொள்ளாச்சி போன்று பெரம்பலூர் மாவட்டத்திலும் வேலை தேடி வரும் இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குவதாக அதிமுக பிரமுகர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டானது கடந்த சில நாள்களாக  சமூக வலைதளங்களில் பரவிவருகிறது இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அருள் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் பெரம்பலூர் மாவட்ட தலைமை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்த புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தது .

ஆனால் இந்த புகார் ஆனது எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் உள்ளதாகவும் இது தவறான புகார் என்றும் புகார் கொடுத்த நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் அருள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட அதிமுக வக்கீல் அணியினர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் மறு புகார் அளித்துள்ளனர் இதனையடுத்து வேப்பூர் அருகே அருளை பெரம்பலூர் காவல் துறையினர் கைது செய்து பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர் அதன்பின் அங்கிருந்து திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அருள் இவ்வாறு கூறியுள்ளார், தன்னை எவ்வித காரணமும் இன்றி ஆதாரங்களும் இன்றி கைதுசெய்துள்ளதாகவும் விரைவில் வெளியே வந்து பெரம்பலூர் பாலியல் பிரச்சினைக்கு எதிராக சட்ட போராட்டத்தை நடத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார்