“முழு ஊரடங்கு” தமிழக அரசு உத்தரவு…. வெறிச்சோடிய சாலைகள்….!!

முத்துக்கடை 4 வழி சாலையில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கால் பனப்பாக்கம் உள்பட 7 பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. அதன்பின் சாலைகளில் வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் சாலைகள் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.

இதனை அடுத்து காவல்துறையினர் முக்கிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். பின்னர் வெளியில் சுற்றித் திரிபவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து முத்துக்கடை பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, ஆந்திராவில் இருந்து சென்ற வாகனங்கள் தடுப்புகள் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசியமான வாகனங்களை மட்டும் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *