பிரதமர் மோடியை சந்தித்த அதிமுக எம்.பி. மைத்ரேயன் ….!!

மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் முடிவதால் அதிமுக எம்.பி. மைத்ரேயன் பிரதமர் மோடியை சந்தித்தார்.

பாராளுமன்றத்தில் உள்ள  மாநிலங்களவையின் தமிழக MP_க்கள் ரத்தினவேல், கனிமொழி, மைத்ரேயன், டி.ராஜா, கே.பி.அர்ஜுனன். ஆர்.லட்சுமணன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து திமுக  சார்பில் வைகோ , சண்முகம் , வில்சன் ஆகியோர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகினர்.

அதே போல அதிமுக சார்பில் முகமது ஜான் , சந்திரசேகர்  , அன்புமணி ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வாகினர்.  இந்நிலையில் ஏற்கனவே அதிமுக சார்பில் மாநிலங்களவையில் MP_ஆக உள்ள மைத்ரேயனின் பதவிக்காலம் வருகின்ற 24_ஆம் தேதியுடன் முடிவடைவதால் அவர் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *