நாடெங்கிலும் உள்ள விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தேவையான இடுபொருள் செலவினங்களை சமாளிப்பதற்காகவும், விவசாயம் சார்ந்த இதர செலவுகளை எதிர்கொள்வதற்காகவும் மத்திய அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது வருடம் தோறும் மூன்று தவணைகளாக தலா 2000 ரூபாய் வீதம் மொத்தம் ரூ.6,000 வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் விவசாயிகளுக்கான 12 ஆவது தவணை விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 13 வது தவணை வரும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கிடையே சமீபத்தில் பயனாளிகள் அனைவரும் அருகாமையில் உள்ள இ -சேவை மையங்களுக்கு சென்று பயோமெட்ரிக் விவரங்களை சரி பார்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இதன்படி விவசாயிகள் தங்களது விவரங்களை அப்டேட் செய்த நிலையில் இந்தத் திட்டத்தில் உங்களது பெயர் தொடர்ந்து நீடிக்கிறதா? உங்களுக்கு இதுவரை எத்தனை தவணை பணம் வந்திருக்கிறது என்ற விவரங்களை கீழ்காணும் முறையில் நாம் தெரிந்து கொள்வோம். அதே நேரம் இதுவரை நீங்கள் ekyc விவரங்களை அப்டேட் செய்யவில்லை என்றால் இனிவரும் காலங்களில் பணம் வராது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதுவரை எத்தனை தவணை பணம் வந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள.?

1. முதலில் https://pmkisan.gov.in/என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. ஹோம் பேஜ் பக்கத்தில் உள்ள ஃபார்மர்ஸ் கார்னர் என்னும் மெனுவின் கீழ் Beneficiary status என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. தற்போது உங்கள் ஆதார் நம்பர் அல்லது வங்கிக் கணக்கு எண் போன்றவற்றை குறிப்பிடவும்.

4. இப்போது get data என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

5. உங்களுக்கு எத்தனையாவது தவணை தொகை வர இருக்கிறது என்ற விவரம் இதில் காட்டப்படுகிறது.

ஆன்லைனில் விவரங்களை ekyc அப்டேட் செய்வது எப்படி.?

1. கிசான் இளையதளத்திற்கு சென்று ekyc அப்டேட் செய்வதற்கான ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

2. இதனை அடுத்து ஆதார் எண், கேப்சா எண், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டும்.

3. உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி என்னை உள்ளிட வேண்டும். இதை செய்யும்போது உங்கள் ekyc விவரம் வெற்றிகரமாக அப்டேட் ஆகி விடுகிறது.

ஆன்லைன் முறையில் அப்டேட் செய்வது எப்படி.?

நீங்கள் உங்களுக்கு அருகாமையில் உள்ள இ -சேவை மையங்களுக்கு  உங்கள் ஆதார் எண் எடுத்துச் செல்லும் பட்சத்தில் அங்கு உங்களுடைய விபரங்களை அப்டேட் செய்து கொடுப்பார்கள்.