இந்திய விமானம் வான்வழியில் பறக்க தடை “மோடி தொடங்க… நாங்கள் முடிக்க” பாகிஸ்தான் அதிரடி..!!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியாக முற்றிலும் பறக்க தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.  

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி  ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370- ஐ மத்திய அரசு  நீக்கியது. இதற்கு பாகிஸ்தான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இந்த பிரச்சனையை ஐநா சபைக்கு கொண்டு செல்ல பல முயற்சிகளை மேற்கொண்டது. பாகிஸ்தானுக்கு சீனா மட்டுமே ஆதரவு அளித்த நிலையில் மற்ற நாடுகள் கைவிட்டன. இந்நிலையில் இந்தியா விமானங்கள் தங்கள் நாட்டு வானிலை பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

Image result for Fawad Hussain

இதுகுறித்து அந்நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் ஹுசைன்  தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்திய விமானங்கள்  பாகிஸ்தான் வான்வழியை முற்றிலுமாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்க பரிசீலித்து வருகிறார்.  ஆப்கானிஸ்தானுக்கு இந்திய வர்த்தகத்திற்காக பாகிஸ்தான் நில வழிகளைப் பயன்படுத்துவதற்கான முழுமையான தடை அமைச்சரவைக் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இந்த முடிவுகளுக்கான சட்ட முறைகள் பரிசீலனையில் உள்ளன மோடி தொடங்கினார் நாங்கள் முடித்தோம் என்று பதிவிட்டுள்ளார்.