பிரதமர் மோடி ஏன் கேரள முதல்வர் பினராயி விஜயனை பின்பற்றக் கூடாது என பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனோ அச்சம் காரணமாக அனைத்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு உதவும் வண்ணம் பல அதிரடி நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி சுமார் ரூ20,000 கோடி நிதியை கொரோனோ நோய் தாக்கத்திற்கு உதவும் வகையில் ஒதுக்கியுள்ளது. மேலும் அனைத்து வீடுகளுக்கும் மாதம் முழுவதும் இலவச ரேஷன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
இது குறித்து பலரும் பாராட்டுகளை கேரள முதல்வர் பினராய் விஜயன்க்கு தெரிவித்து வரும் சூழ்நிலையில், பிரகாஷ்ராஜ் கேரள முதல்வரின் திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், கேரள முதல்வர் பினராயி விஜயன் நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். கொரோனோவுக்கு எதிராக நல்ல திட்டங்களை வகுத்துள்ளார். பாரதப் பிரதமர் மோடி நரேந்திர மோடி அவர்கள் ஏன் கேரள முதல்வர் பினராயி விஜயனை போல் செயல்படக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.