ப்ளீஸ் உங்கள சந்திக்கணும்….. ”அனுமதி கேட்ட கமல்நாத்”….. சாட்டையடி கொடுத்த பாஜக …!!

மத்திய பிரதேச மாநில அரசியலில் புதிய புதிய அரசியல் திரும்புங்கள் நிகழ்ந்து வருவது தேசிய அரசியலில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 22 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு கர்நாடகாவில் தஞ்சம் புகுந்த நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஆளும் கட்சிக்கு உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியை விட எதிர்க்கட்சியான பாஜக அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை கொண்டுள்ளதால் நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதப்படுத்தி வருவதாக பாஜக உச்சநீதிமன்றம் சென்றுள்ளது.

KAMAL NATH VS AMIT SHAH VS EDURAPPAக்கான பட முடிவுகள்

இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு விரைவில் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தை சந்திக்க, எடியூரப்பா, அமித்ஷா மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் எழுந்துள்ளது.இதனிடையே கர்நாடகா ஹோட்டலில் தங்கியுள்ள 22 சட்டமன்ற உறுப்பினர்களும் கர்நாடக மாநில டிஜிபிக்கு, தாங்கள் ஹோட்டலிலேயே இருப்பதாகவும் , தங்களை சந்திக்க எந்த காங்கிரஸ் கட்சியினருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்றும் கடிதம் எழுதியுள்ளனர்.