தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். இவர் தனக்கான தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். சமீபத்தில் இவரது விடாமுயற்சி படம் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் படக்குழு படத்தை வெளியிட காலதாமதம் செய்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் தனது கார் ரேசிங்கில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து துபாயில் நடைபெற உள்ள கார் ரேசிங் போட்டியில் 24 ஹெச் மற்றும் ஐரோப்பிய 24 எச் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்ள தீவிரமாக பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

கார் ரேசிங்கில் ஈடுபட்டுள்ள நடிகர் அஜித்குமார் தனது போட்டியின் இடைவேளைகளில் ரசிகர்களுக்கு உணர்ச்சிகரமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில், ரேஸ் பார்ப்பதற்காக நிறைய ரசிகர்கள் வந்திருக்கிறார்கள். இது மிகவும் எமோஷனலான பீலிங். நான் சொல்லப் போற விஷயம் சொல்ற விஷயம் ஒன்னே ஒன்னு தான் ரசிகர்கள் எல்லாரும் சந்தோஷமா, ஆரோக்கியமா, மன நிம்மதையோட வாழ்வதற்கு கடவுள வேண்டுகிறேன்.

எல்லாரும் அவங்க அவங்க குடும்பத்தை பாருங்க, கடுமையா உழைங்க, நமக்கு புடிச்ச விஷயத்துல வெற்றியடையவில்லை என்றாலும் பரவாயில்லை. தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள். சண்டை போடாதீங்க வாழ்க்கை மிகவும் சிறியது சந்தோஷமா இருங்க.இவ்வாறு தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

 

View this post on Instagram

 

A post shared by Ajith Network (@ajithnetwork_page)