
உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள பரபரப்பான சாலையில் எஸ்ஐவி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரின் பேனட்டில் பாஜக கொடி பொருத்தப்பட்டு இருந்தது. இந்த எஸ்யுவி காரின் கண்ணாடியில் ஒரு நபர் அமர்ந்திருக்கிறார். மேலும் இருவர் கதவுகளில் தொங்கிகொண்டு இருக்கின்றனர். இதற்குப் பின்னணியில் ஸ்க்விட் கேம்ஸ் சீசன் 2 வின் ரவுண்ட் அண்ட் ரவுண்ட் பாடல் ஒளிபரப்பாகிறது.
இந்த 3 வாலிபரும் ஆபத்தான இந்த பயணத்தை ரசிக்கின்றனர். ஆனால் இது மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்துள்ளது. இது தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளத்தில் வைரம் ஆனது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் விமர்சித்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த நொய்டாவின் காவல்துறையினர் கார் உரிமையாளருக்கு இருந்து 33 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#उत्तर प्रदेश : नोएडा में BJP झंडा लगी फॉरच्यूनर कार पर लटककर Reel बनवाई,
पुलिस ने 33 हजार का चालान काटकर रिटर्न गिफ्ट घर भेजा pic.twitter.com/Z5nsVGOnr9
— Snatni Radhe Shyam Pasi (@RadheShyam15800) January 4, 2025