நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டாவது அணியாக தேர்வாகியுள்ளது. டெல்லி மற்றும் லக்னோவுக்கு இடையேயான நேற்றைய ஐபிஎல் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெல்லி அணி பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. இதனால் புள்ளி பட்டியலில் 16 புள்ளிகள் உடன் இருக்கும் ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. ஆனால் எத்தனையாவது இடம் என்பது இன்னும் உறுதியாக வில்லை.