இதை மட்டும் கண்டிப்பா பண்ணாதீங்க… எல்லாமே ரொம்ப பாதிக்கப்படும்… மீறுனா அவ்ளோதான்… எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிக்குள் வீசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் காட்டு எருமைகள், சிறுத்தை, புலிகள், காட்டு யானைகள், கரடிகள், மான்கள், புலிகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த இடத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தேவையில்லை என தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் மண்ணின் வளம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு அங்கு வசிக்கும் வன விலங்குகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அந்த தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பவர்கள் மீது அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு பொது இடங்கள் மற்றும் வனப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் கண்டிப்பாக வீசக் கூடாது என கூறியுள்ளனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதால் அதனை ஒழிப்பதற்குப் சுற்றுலா பயணிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், அதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.