“பிளாஸ்டிக் தடை”அரசாணை செல்லும்…உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ஆம்  தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.இதையடுத்து  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள் விநியோகம் நிறுத்தப்பட்டு  பழைய பேப்பர் ,துணி பை உள்ளிட்ட பொருள்களை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.  இத்திட்டம் பலர் மத்தியில் வரவேற்பையும்,எதிர்ப்பையும் பெற்று வந்தது.

Image result for chennai high court

மேலும் தமிழகத்தில் இத்திட்டத்தால்  தொழில்கள் பாதிக்கப்படுகிறது என்றும்,தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தவறுகள் உள்ளதென்றும், சுட்டி காட்டி தடையை நீக்கக் கோரி  தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள்  சங்கம் வழக்கு தொடர்ந்ததையடுத்து,நீதிபதி வழக்கை  விசாரித்து   தள்ளுபடி செய்தார். இந்நிலையில் வழக்கானது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது.இதில்,14 வகையான  பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்து  தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *