இந்த பேக் யூஸ் பண்ண கூடாதுன்னு தெரியாதா….!! சோதனையில் சிக்கிய கடை உரிமையாளர்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்துவதாக உணவுப் பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, மண்டல ஆய்வாளர் மற்றும் செங்கல்பட்டு நகர உணவு பொருள் பாதுகாப்பு ஆய்வாளர் ஆகியோர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றதா எனவும், டீ தூளில் கலப்படம் உள்ளதா எனவும், தின்பண்டங்கள் காலாவதி ஆகி உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 2 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து 2 கடைகளுக்கும் தலா ரூபாய் 2,000 அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *