மொத்தம் 10 கிலோ பிளாஸ்டிக் பைகள்…. வியாபாரிகளுக்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

பிளாஸ்டிக் பைகளை விற்பனைக்காக வைத்திருந்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனத்தில் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் வாரச் சந்தைகள் நடைபெறுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆடு, கோழி மற்றும் காய்கறி சந்தை நடைபெறுகிறது. இங்கு வெளியூர் வியாபாரிகள் வந்து காய்கறி மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் வியாபாரிகள் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை கொடுப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி அதிகாரிகள் வாரச்சந்தையில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வியாபாரிகளிடம் இருந்து சுமார் 10 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *