“63 கிலோ பிளாஸ்டிக் பைகள்” சோதனையில் சிக்கிய கடைகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!

தடையை மீறி விற்பனை செய்த சுமார் 63 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

வேலூர் மாநகராட்சி கமிஷனராக அசோக்குமார் உள்ளார். இவர் கடைகளில் பயன்படுத்தப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தும், தடையை மீறி பயன்படுத்தப்படும் கடைகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் சுகாதார அலுவலர் தலைமையில் அதிகாரிகள் தலைவன் பேட்டை, குட்டை மேடு பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அப்போது ஒரு கடையில் 50 கிலோ பிளாஸ்டிக் பைகள், கவர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு அந்த கடைக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். இதைப்போலவே மேலும் சில இடங்களில் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டபோது 25 கடைகளில் சுமார் 12 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து ரூபாய் 3500 அபராதம் விதித்ததோடு கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *