தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராத தொகை விதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மறைமலை நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது. இதுபற்றி மறைமலைநகர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளன. எனவே நகராட்சி சுகாதார ஆய்வாளர் அப்பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தியுள்ளார். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது உறுதியானது.
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளனர். அதோடு பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்து உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் சுமார் 50 கிலோ இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.