”நடவு செய்த பள்ளி மாணவர்கள்” வேளாண் முக்கியத்துவத்தை உணர்த்தினர் ….!!

வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் வயலில் இறங்கி நாற்று நட்டனர். 

சிவகங்கையில் உள்ள மவுண்ட் லிட்டர் என்ற தனியார் பள்ளிகள் பாடத்திட்டத்துடன் சேர்ந்து வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தையும் அதன் பணிகளையும் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சிவகங்கை பகுதிக்கு  அருகில் உள்ள குக்கிராமத்தில் இயற்கை வேளாண் பண்ணைக்குப் பள்ளி சார்பில் அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள் வயலில் இறங்கி பயிரிடப்பட்ட செடிகளை பார்வையிட்டனர்.

அதன்பிறகு ஆடுகள் வளர்க்க அமைக்கப்பட்டிருந்த பட்டிகள் குறித்தும்  அவைகளுக்கு அளிக்கப்படும் உணவுகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். அதனை தொடர்ந்து விவசாய நிலத்திற்கு வந்த மாணவர்கள் வயலில் டிராக்டர் உழுது கொண்டிருப்பதை பார்வையிட்டனர். அதன் பின்னர் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் நாற்று நடும் பூஜையில் மாணவர்கள் தங்களையும் ஈடுபடுத்திக் கொண்டனர். பூஜை முடிந்த நிலையில் நாற்றுக்களை பெற்றுக்கொண்ட மாணவர்கள் அங்கு பணிபுரியும் பெண்களின் உதவியுடன் வயலில் இறங்கி தங்களின்  பிஞ்சு கைகளால் நெல் நாற்றுகளை நடவு செய்தனர்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *