மீனம் இராசிக்கு… “பெருமையை பற்றி பேசவேண்டாம்”… மனதில் தைரியம் தன்னம்பிக்கை பிறக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று எவரிடமும் சுய பெருமையை பற்றி பேசவேண்டாம். தொழில் வியாபாரத்தில் உருவாகிற இடையூறு தாமதமின்றி சரிசெய்யவேண்டும். அளவான அளவில்தான் இன்று பண வரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மிகவும் தேவையாக இருக்கும். சத்தான உணவுகளை உண்ணுங்கள். ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள். இன்று குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களும் அவ்வப்போது வந்து செல்லும். கணவன் மனைவிக்கிடையே நிதானத்தை மட்டும் கடைபிடியுங்கள். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உறவினர்கள் நண்பரிடம் கவனமாக பழகுங்கள். தாயின் உடல்நிலையில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம். அதேபோல கூடுதல் முயற்சியின் பேரில் இன்று நீங்கள் வெற்றி வாய்ப்புகளை குவிக்க முடியும். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். ஆன்மிக சுற்றுலா செல்வதற்கான திட்டங்களும் நடக்கும். உங்களுடைய உடலில் இன்று வசீகரத் தன்மை இருக்கும்.

காதலில் வயப்பட கூடிய சூழல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அக்கம் பக்கத்தில்  எப்பொழுதும் போல அன்பாக நடந்து கொள்ளுங்கள் அது போதும். புதிய தொழில் முயற்சிகள் ஏதும் வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். பழைய கடன்கள் அடைபடும். கடன்கள் அனைத்துமே கட்டுக்குள் இருக்கும். அதை பற்றி எல்லாம் கவலை வேண்டாம். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பாடத்தில் தயவுசெய்து கவனத்தை செலுத்துங்கள் அது போதும். இன்று நீங்கள் வீட்டை விட்டு செல்லும் பொழுது நீல நிறத்தில்  ஆடையோ அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையோ  எடுத்துச் செல்லுங்கள். இந்த நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நிறமாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அந்த தானமாக வழங்குங்கள். செல்வ செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். கர்ம தோசங்கள் அனைத்தும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *