பிரதமர் மோடிக்கு எதிரான போஸ்டர்கள் அகற்றம்….. பாஜகவினர் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது தொடர்பாக சுமார் 100 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு இதுகுறித்து 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் டெல்லியின் பல பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிராக ஒட்டப்பட்ட ஆயிரக்கணக்கான போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளது.

அந்த போஸ்டர்களில் “மோடியை அகற்று, நாட்டைக் காப்பாற்று என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டது தொடர்பாக இதுவரை 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை ஆம் ஆத்மியை சேர்ந்தவர்கள் தான் செய்ததாக பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.