மின்னல் வேகத்தில் “பிகில்” … வெயிட்டிங்கில் ரசிகர்கள் ..!!

 தீபாவளிக்கு வெளிவரும் “பிகில்” படத்தின் வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் திகில். இப்படத்தில் விஜய் ,  நயன்தாரா , ஜாக்கி ஷராஃப் , யோகி பாபு , கதிர் , விவேக் டேனியல், பாலாஜி , ஆனந்தராஜ் ,  இந்துஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ஒரு சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் “சிங்கப்பெண்ணே பாடல்” வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது . ஆகையால் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

Image result for pikil vijay

இந்நிலையில் விஜய் தனது அடுத்தகட்ட பணியாக டப்பிங் பணியை தொடங்கி உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அவர் அந்த பணியை முடித்து விடுவார் என்றும் அதனைத் தொடர்ந்து நயன்தாரா உள்ளிட்ட கேரக்டர்களின் டப்பிங் பணிகள் விரைவில் நடைபெறும் எனவும் தெரிகிறது. இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளதால் படத்தின் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.