விஜய் ஆண்டனியின் “பிச்சைக்காரன்-2″…. புது பாடல் வெளியீடு…. இணையத்தில் வைரல்…..!!!!

சசி டைரக்டில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான  “பிச்சைக்காரன்” படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. அதோடு விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் இப்படம் திருப்பு முனையை ஏற்படுத்தி கொடுத்தது. இதையடுத்து இந்த படத்தின் 2ஆம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமின்றி இயக்கியும் வருகிறார்.

இந்நிலையில் பிச்சைக்காரன் -2 திரைப்படத்தின் புது அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள பிக்கிலி என்ற பாடல் இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிச்சைக்காரன் 2 படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply