தத்துவ ஞானி… பேராசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் காலவரிசை…!!

டாக்டர் ராதாகிருஷ்ணனின் முழு வாழ்க்கை வரலாற்றையும் கால அட்டவணையாக இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

காலவரிசை:

1888: திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தார்.

1918: மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். 1921ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார்.

1923: அவரின் படைப்பான இந்திய தத்துவம் வெளியிடப்பட்டது.

1931: ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1939: பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆனார்.

1946: யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.

Image result for ராதாகிருஷ்ணன் இந்திய தத்துவம்

1948: பல்கலைக்கழக கல்வி தலைவர் ஆகுமாறு  இந்திய அரசு அவரை கேட்டு கொண்டது. 

1949: சோவியத் யூனியன் தூதராக நியமிக்கப்பட்டார். 

1954: பாரத ரத்னா விருது பெற்றார்.

1962: இந்திய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1967: ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

1975: தனது 86வது வயதில் ஏப்ரல் 17 1975 ஆம் ஆண்டு சென்னையில் காலமானார்