பெரும்பாலும் மக்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த திட்டம் இந்தியாவில் மிகவும் பிரபலமான சிறு சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீட்டாள ர்கள் குறைந்தபட்சமாக 500 வரையும், அதிகபட்சமாக  1.5 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  சில நேரங்களில் அவசர தேவை ஏற்பட்டால் பிஃஎப் கணக்கில் இருந்து பாதி தொகையை அட்வான்ஸ் முறையில் எடுக்கலாம்.

முதலாவதாக epfindia.gov.in என்ற தளத்தில் Member UAN என்பதை க்ளிக் செய்து அதில் Online claim (Form 31,19,10C &10D) என்ற ஆப்சனை தேர்ந்தெடுங்கள். அதில் பணத்தை எடுப்பதற்கான காரணம், எவ்வளவு பணம் வேண்டும் என்பதைக் கொடுத்தால் உங்கள் மொபைலுக்கு ஓடிபி வரும். அதைக் கொடுத்து 15 – 20 நாட்களுக்குப் பின் வங்கிக் கணக்கிற்கு பணம் வந்து விடும்.