செல்லப் பிராணியின் முதல் பிறந்தநாள்…. கேக் வெட்டி கொண்டாடிய குக் வித் கோமாளி பிரபலம்…. வைரலாகும் புகைப்படம்…!!

செல்லப் பிராணியின் முதல் பிறந்தநாளை குக் வித் கோமாளி பிரபலம் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இப்போட்டியின் இறுதிச்சுற்றுக்கு பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, ஷகிலா மற்றும் பவித்ரா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பவித்ரா அவ்வப்போது தனது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருவார். அந்த வகையில் அவர் தான் செல்லமாக வளர்க்கும் கோகோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நாயின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பவித்ரா லட்சுமி