பெட்ரோல், டீசல் வரி குறைப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 2 வாரமாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. முதல் முறையாக பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால் மக்களும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர் . இதற்காக மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இதற்காக மேற்கு வங்காள அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியில் லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது .

இதைப்பற்றி மேற்குவங்காள நிதி மந்திரி அமித் மித்ரா கூறுகையில் ” மத்திய அரசானது பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 32 .90.ம் லிட்டருக்கு ரூ. 31.80 ம்  என்பதும் வரியாகப் பெற்று வந்துள்ளது. ஆனால் தற்போது மாநில அரசு பெட்ரோல் இருக்கு ரூ . 18. 46 ம்  மற்றும் டீசலுக்கு ரூ. 12. 77 ம் மட்டுமே வரியாக பெறப்படும்” என்று அவர் கூறியுள்ளர். மாநில அரசின் இந்த திடீர் அறிவுப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *