OPS மகனின் வெற்றியை எதிர்த்து மனு …….!!

தேனி மக்களவைத் தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார் இந்நிலையில் ரவிந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தேனியை சேர்ந்த மிலானி  என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தேனி தொகுதியில் அதிகார துஷ்பிரயோகம் செய்து பணப்பட்டுவாடா நடைபெற்றதற்கான ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Image result for ரவிந்திரநாத்

இருப்பினும் அதை கண்டுகொள்ளாமல் தேர்தலில் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது என்றும் , அதே வேளையில் பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது எனவே தேனி தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வென்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.