பெரு நாட்டில் யாக்கு என்ற புயல் உருவாகியுள்ளது. இந்த புயலால் அந்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் அந்நாட்டில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக லீமா நகரின் ஜுமார்க்கா பகுதியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கைக்குழந்தையை ஒருவர் உயிருடன் மீட்டுள்ளார்.
மேலும் லீமா பகுதியில் 3 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அஸ்திவாரத்துடன் இடிந்து ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மூன்று வாரங்களில் அங்கு பெய்த மழையால் கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பு குழுவினரும் தீயணைப்பு வீரர்களும் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.