பணம் எடுக்க போன மகேஸ்வரி…! தலை நசுங்கிய சோகம்..! இப்படி ஆகிடுச்சேன்னு கண்ணீரில் குடும்பம் …!!

பேருந்தின் பின்புற சக்கரம் தலையில் ஏறியதால் தலை நசுங்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த தம்பதியினர் கண்ணையன்- மகேஷ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கண்ணையன் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார் . நேற்று மகேஸ்வரி வங்கியில் பணம் எடுப்பதற்காக தனது உறவினரின்  இருசக்கர வாகனத்தில் பின்புறம்  அமர்ந்து சென்று கொண்டிருந்தார் . அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்திலிருந்து மகேஸ்வரி  நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அந்நேரத்தில் எதிர்ப்புறம் வந்த அரசு பேருந்தின் பின் சக்கரம் மகேஸ்வரியின் தலையின் மீது ஏறியது. இதில் மகேஸ்வரி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.