நிலைத்தடுமாறி கவிழ்ந்த பேருந்து…. படுகாயமடைந்த பயணிகள்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 25 – க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து ஒரு தனியார் பேருந்து சென்றுள்ளது. இந்த பேருந்தில் 40 – க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இதனையடுத்து கீராம்பாடி பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்து நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த பேருந்தில் பயணம் செய்த 25 – க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்நிலையில் செய்யாறு பகுதியில் வசிக்கும் மதியழகன், கணேசன், அஜித்குமார், சண்முகம், அக்தர் மற்றும் இந்திரா உள்ளிட்ட 15 பேர் ஆர்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் ஒரு சிலர் வேலூர் அரசு மருத்துவமனையிலும், 10 பேர் வாலாஜா அரசு மருத்துவமனையிளும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தை ஏற்படுத்திய பேருந்து டிரைவர் மற்றும் கண்டெக்டர் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆற்காடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *