நாளை முதல் அனுமதி….10 நிமிடத்திற்கு முன்பு – மக்களுக்கு அரசு அறிவிப்பு…!!

கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் மக்கள் ரயிலில் பயணம் செய்யலாம் என்று  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ரயில் சேவைகள் அனைத்தும் முடங்கின. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ரயில் சேவை தொடங்கியதை அடுத்து ஊழியர்களுக்கு மட்டும் ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

அதன்படி காலை 7 – 10 மணி வரை, மாலை 4.30 – 7 மணி வரை அனுமதி கிடையாது. கூட்ட நெரிசல் குறைவாக உள்ள நேரம் தொடங்குவதற்கு 10 நிமிடம் முன்பாக டிக்கெட் வழங்கப்படும். பயணிகள் அனைவரும் ஒருவழி டிக்கெட் மட்டுமே கவுண்டர்களில் பெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.