100% சதவீத இருக்கைகளுடன் திரையரங்கிற்கு அனுமதி…. அதிரடி உத்தரவு பிறப்பித்த அரசு….!!

ஆந்திர மாநிலத்தில் 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரானா தொற்று அதிகரித்ததன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள், தியேட்டர்கள் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. தற்போது, தொற்று பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் காரணத்தால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

iftamil - தமிழகத்தில் பிரபலமான நடிகர்கள் படம் வெளிவராததால் திரையரங்குகள்  முடக்கம் !அதன்படி, கொரானா காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில், கொரானா தொற்று குறைந்து வரும் காரணத்தால், ஆந்திரமாநில முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி ஆந்திர மாநிலத்தில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை இயக்குவதற்கு அனுமதி அளித்துள்ளார். இதற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *