தந்தை பெரியார், பாரத பிரதமர் மோடி யாருடைய பிறந்தநாள் அதிக வரவேற்பை தமிழகத்தில் பெற்றுள்ளது என்று சமூகவலைத்தளத்தில் போட்டி போட்டு hashtagக்கள் ட்ரென்ட் ஆக்கப்பட்டு வருகிறது.
செப்டம்பர் 17 ஆம் தேதியான இன்று இந்தியாவின் மிகப்பெரிய 2 ஜாம்பவான்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவர் தமிழகத்தில் பிறந்த பெரியார். மற்றொருவர் குஜராத்தில் பிறந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி. இருவரது பிறந்த நாளையும் நாடு முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் யாருடைய பிறந்த நாளுக்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது என்று இரு தரப்பினரும் சமூகவலைதளத்தில் hashtagக்குகளை போட்டிபோட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர். ஆனால் தற்பொழுது வரை #HBDperiyar, #periyar141 என்ற hashtagக்கள் முதல் இடங்களிலும், #HBDnarendramodi என்ற hashtag அதற்கு பின் வரிசையிலும் இடம் பெற்று உள்ளது. இன்னும் நேரம் இருக்கும் பட்சத்தில் இறுதிவரை பெரியாரின் hashtagக்கள் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொள்ளுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.