பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசியிலுள்ள மாங்குடி என்னும் கிராமத்தில் 60 குடும்பத்தை சேர்ந்த அருந்ததியர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு நிரந்தர சுடுகாடு இல்லாத நிலையில் மாங்குடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இதனால் அப்பகுதி மக்கள் சுடுகாடு வேண்டி சாலை மறியலுக்கு முயன்றுள்ளனர்.
மேலும் இறந்த பெண்ணின் சடலத்தை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், வருவாய் அதிகாரிகள், யூனியன் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் 20 நாட்களில் நிரந்தர சுடுகாடு அமைக்க இடம் ஒதுக்கப்படும் என்று உறுதிமொழி அளித்துள்ளனர். அதன் பின்னர் சாலை மறியல் முயற்சியை அப்பகுதி மக்கள் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.