ஆர் டி ஓ ஆபீசுக்கு வந்த மக்கள்…. போராட்டத்தின்போது முதியவர் செய்த செயல்…. திருவள்ளூரில் பரபரப்பு….!!!

ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி 200-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வந்து ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதனால் அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். எனவே காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் தகவலறிந்த ஆர்.டி.ஓ அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி நேர பேச்சு வார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் பேசி முடிவு எடுப்பதாக தெரிவித்தார். இந்நிலையில்  போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த  முதியவர் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கூறி திடீரென தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *