“இங்கே மணல் எடுக்க கூடாது” போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்….!!!

அகல ரயில் பாதை திட்டப் பணிக்கு மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தில் அகஸ்தியன் பள்ளி என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து திருத்துறைப்பூண்டி வரை தென்னக ரயில்வே மூலம் 37 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இதற்காக வேதாரண்யம் அருகே உள்ள கொல்லி தீவு என்னும் பகுதியிலிருந்து மணல் எடுக்க ஒப்பந்ததாரர் அனுமதி பெற்றுள்ளார். எனவே ஒப்பந்ததாரர் பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியுடன் அரசு அனுமதி பெற்ற இடத்திற்கு மணல் எடுக்க சென்றுள்ளார்.

ஆனால் அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் 1/2 கிலோ மீட்டர் தூரத்தில் கடல் இருக்கின்றது. ஆகவே இங்கிருந்து மணல் எடுத்தால் கடல் நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளது என்று கூறி பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அதோடு இது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று கூறியுள்ளார். அதன் பின்னரே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *