கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் மாலை நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை சுமார் 1/2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கியது. அதே நேரம் சில பகுதிகளில் ஆலங்கட்டியுடன் கூடிய மழை பெய்தது. சூறாவளி காற்று, ஆலங்கட்டி மழையால் விவசாய தோட்டங்கள், பசுமை குடில்கள் சேதமானது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.