கடித்து குதறிய தெருநாய்கள்…. ஆடுகள், கோழிகள் பலி…. பொது மக்களின் கோரிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் மனிதர்களையும் நாய்கள் கடித்து குதறியது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர்.

நேற்று முன்தினம் சிரியலூர் இனாம் கிராமத்தில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 2 ஆடுகளையும், 5 கோழிகளையும் நாய்கள் கடித்து கொன்றது. எனவே நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply