“மக்களின் நாயகியே”…. இந்த விருதை வாங்க நீ இல்லையே…. ரசிகர்கள் வருத்தம்…!!

மறைந்த பிரபல நடிகை சித்ராவிற்கு “மக்களின் நாயகி” என்ற சிறந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் சின்னத்திரை விருது வழங்கும் விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் பல கலைஞர்களுக்கு அவர்களின் திறமையை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவிற்கும் மிகச் சிறந்த விருது அறிவிக்கப்பட்டது.

சித்ரா கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஒரு தனியார் ஹோட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மறைவு திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சித்ராவிற்கு “மக்களின் நாயகி” என்று விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை வாங்க நடிகை சித்ரா உயிருடன் இல்லையே என்று அவரது ரசிகர்களும், சக திரை பிரபலங்களும் வருத்தத்தில் மூழ்கியுள்ளனர்.