மக்கள் மகிழ்ச்சி…. ”கார் , வீடு எளிதாக வாங்கலாம்” வட்டியை குறைந்து RBI அதிரடி..!!

வங்கிகளில் குறுகிய கால கடன் வட்டியை 0. 35 சதவீதம் குறைத்தது ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறுகியகால கடனுக்கான வட்டியை 0.35% குறைந்துள்ளது.கடந்த மூன்று முறை  ரிசர்வ் வங்கிகள் வட்டி விகிதம் 0.25 % குறைத்த நிலையில் தற்போது  0.35 % குறைத்துள்ளது.  வீடு , வாகனம் வாங்குபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வட்டி வீதம் குறைய வேண்டுமென்று புதிய முதலீட்டாளர்களின் அழுத்தம் காரணமாக இந்த வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைகிறது.இதனால் கார் , வீடு , இரண்டு சக்கர வாகனங்களில் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.