டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் வந்தே வாரத் எக்ஸ்பிரஸ் கடந்த திங்கட்கிழமை அன்று நடுவழியில் பழுதடைந்தது. இதனால் ரயில் பயணிகள் சுமார் 3 மணி நேரம் சிரமப்பட்டனர். இந்த சம்பவத்தால் பல ரயில்கள் பாதிக்கப்பட்டதுடன், மற்ற ரயில்களில் பயணித்த பயணிகளும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதைத்தொடர்ந்து வந்தே பாரத் ரயிலை மீட்க பழைய இந்திய ரயில்வே இஞ்சின் வரவழைக்கப்பட்டது.

அதன் பிறகு பழைய இந்திய ரயில்வே இஞ்சின், வந்தே பாரத் ரயிலை இழுத்துக் கொண்டு சென்றது. இதன் காரணமாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக சென்றது. அதோடு இந்த ரயிலில் பாஜக ராஜ்யசபா எம்பி கீதா ஷக்யாவும் பயணித்துள்ளார். இந்த வந்தே பாரத் ரயிலில் பயணித்த பயணிகள் மற்ற ரயில்கள் மூலம் அவர்கள் செல்லும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.