“அவர்களை கைது செய்ய வேண்டும்” காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…. கரூரில் பரபரப்பு….!!!

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு மக்கள் காத்திருப்பு போராட்டம் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள வெள்ளியணை மேட்டுப்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்த மக்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பட்டி சேர்ந்த 3 இளைஞர்கள் சிலர் வீடு புகுந்து தாக்கியுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே அவர்களை கைது செய்யக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *