மக்களே உஷார்… ஆன்லைனில் ரூ.9 3/4 லட்சம் மோசடி… தீவிர விசாரணையில் போலீசார்..!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூரில் நரேந்திரன் – திவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்ஜினியரிங் முடித்துள்ள திவ்யா வீட்டில் இருந்தபடி வேலை செய்வது போன்ற பகுதி நேர வேலையை தேடி வந்தார். இதனையடுத்து அவரது செல்போன் whatsapp எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் முதலில் உங்களுக்கு பயிற்சி கொடுத்து அதன் பின்பு பகுதி நேர வேலை தருவதாகவும் சில டாஸ்க் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

அதனை உண்மை என நம்பி திவ்யா முதலில் சிறிய தொகையாக அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். ஆனால் அவர் அனுப்பிய பணத்தை காட்டிலும் கூடிய  பணம் கிடைத்திருக்கிறது. இதனைதொடர்ந்து  திவ்யா  ரூ.9 3/4 லட்சம் அனுப்பி இருக்கிறார். அதன்  பின்னர் அவர்கள் பணம் அனுப்புவதை நிறுத்தி விட்டனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த திவ்யா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply