மக்களே உஷார்…. அடுத்தடுத்து 4 லீவ்…. ATM பணம் தட்டுப்பாடு….. கையிருப்பு முக்கியம் …!!

அடுத்த வாரத்தில் 4 நாட்கள் வங்கிக்கு விடுமுறை இருப்பதால் பணத்தட்டுப்பாட்டை போக்க முன்னெச்சரிக்கையாக பணத்தை கையிருப்பாக வைத்துக் கொள்ளவும்.

அடுத்த வாரத்தில் 4 நாட்கள் வங்கிக்கு விடுமுறை இருப்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக ATM அல்லது வங்கிகளில் இருந்து பணத்தை கையிருப்பாக எடுத்து வைத்துக்கொள்ளவும். இதில் ஒரு அரசு விடுமுறை , ஒரு போராட்ட அறிவிப்பு , ஒரு சனிக்கிழமை , ஒரு ஞாயிற்றுக்கிழமை அடங்கும்.

25ஆம் தேதி ( புதன்கிழமை ) தெலுங்கு வருட பிறப்பு விடுமுறை ,  27ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை ) 10 பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு ஒன்றாக இணைப்பதை எதிர்த்து  வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்துவதால் வங்கி பணி முடக்கப்படும். அதை தொடர்ந்து வரும் 28ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை மற்றும் மறுநாள் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர் விடுமுறை இருக்கின்றது.

இதற்கிடையில் 26 ஆம் தேதி மட்டும் வங்கி அலுவல் பணி நடைபெறும். அடுத்தடுத்து தொடர்ந்து விடுமுறையாக இருந்து பணிகள் முடக்கப்படுவதால் வருகின்ற 28 , 29 ஆகிய தேதிகளில் ஏடிஎம்மில் பணத்தட்டுப்பாடு இருந்து வாடிக்கையாளரை கஷ்டத்துக்கு ஆளாக்கும். இதனால் முன்னெச்சரிக்கையாக பணத்தை எடுத்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.