மக்கள் நீதி மைய்யத்தில் நேர்காணல் நடைபெற்று வருகின்றது….!!

மக்கள் நீதி மையத்தின் வேட்பாளருக்கான நேர்காணல்  ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது .

மக்கள் நீதி மையம் வருகின்ற பாராளுமன்ற தொகுதியில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்று ஏற்கனவே கமலஹாசன் அவர்கள் தெரிவித்திருந்தார் . மக்கள் நீதி மய்யம் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது விருப்பம் இருக்கக் கூடியவர்கள் யார் வேண்டுமானாலும் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடலாம் என்று தெரிவித்திருந்தார் .

இந்த நிலையில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு 1,137 பேர் வேட்பு மனு பெறப்பட்டு இருந்தது . இதையடுத்து கமல்ஹாசன் அவர்களின் மக்கள் நீதி மைய வேட்பாளர்களின் நேர்காணல்  தற்போது நடைபெற்று வருகிறது . வேட்புமனுவை அளித்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது .இன்று  13 பாராளுமன்ற தொகுதிகளில் இருந்து 105 பேர்  முதல்கட்டமாக அழைக்கப்பட்டுள்ளனர் .

இந்த நேர்காணல் தொடர்ந்து ஐந்து நாளைக்கு அதாவது 15ம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் மக்கள் நீதி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது .இதில் இன்று திருச்சி , திருவண்ணாமலை , விழுப்புரம் , ஆரணி , சிதம்பரம் , பாண்டிச்சேரி , ஸ்ரீபெரும்புதூர் , திருவள்ளூர் , அரக்கோணம் மற்றும்  சென்னையில் இருக்கக்கூடிய மூன்று பாராளுமன்ற தொகுதிகள் உள்ளிட்ட 12 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் 105 பேருக்கும் இன்று நடைபெறும் நேர்காணலில் அழைப்பு விடுக்கப்பட்ட்து. இந்த நேர்காணலில்  கமல் ,  நடிகை கோவை சரளா , மதன் ,  கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய நேர்காணல் உயர்மட்ட குழு நேர்காணலை நடத்துகின்றது  . மேலும்வருகின்ற 15_ஆம் தேதி எந்தெந்த தொகுதிக்கு யார் யார் வேட்பாளர் என்ற முழு பட்டியல் வெளியிடப்படும் என்று மக்கள் நீதி மையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .